கோவை கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் சொண்டி கோகுல் என்ற கோகுல்(22). ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது அவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியில் உள்ளார். இந்த நிலையில் இன்று காலை கஞ்சா வழக்கு தொடர்பாக கையெழுத்து போடுவதற்காக கோகுல் தனது நண்பரான மனோஜ் என்பவருடன் ஜே.எம். கோர்ட்டிற்கு வந்தார். பின்னர் கோகுல் தனது வக்கீலுடன் உள்ளே சென்று கையெழுத்து போட்டு வெளியில் வந்தார்.
தொடர்ந்து கோகுல், மனோஜ் ஆகியோர் வக்கீலுடன் கோர்ட்டுக்கு பின்புறம் உள்ள பகுதிக்கு டீ குடிக்க சென்றனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேரும் கோகுலின் அருகே வந்தனர். வந்த வேகத்தில் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கோகுலை சரமாரியாக வெட்டினர். இதில் கோகுலின் கழுத்தில் கத்தி வெட்டு விழுந்தது. கத்தி அப்படியே கழுத்தில் மாட்டி கொண்டது. தொடர்ந்து அந்த கும்பல் மனோஜை வெட்டியது. இந்த சம்பவத்தில் கோகுல் சம்பவ இடத்திலேயே இறந்தார். மனோஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இக்கொலையில் ஈடுபட்ட 4 கொலையாளிகளும் அலட்சியமாக நடந்து சென்றதும், வழியில் வாலிபர் ஒருவரை கத்தியால் தாக்கி விரட்டி விடுவதும் பின்னர் நடந்து சென்றதும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.