கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி அம்மே கவுண்டனூர் பகுதியாகும்.அம்மே கவுண்டனூர் வீரமாத்தி அம்மன் கோவில் வீதி வசிக்கும் கார்த்திக் மற்றும் மனைவி சத்யா குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு நைநிதா மூன்று வயது பெண் குழந்தை உள்ளது,வீட்டின் முன்புறம் உள்ள வராண்டாவில் இன்று காலை 10 மணி அளவில் நைநிதா விளையாட்டு கொண்டிருந்தார் அப்போது அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக குழந்தை விழுந்து பலியானது,குழந்தை காணவில்லை என பெற்றேர் தேடி வந்த நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்த குழந்தை உடலைக் கண்டு பெற்றேர் கண்ணீர் விட்டு அழுதனர் இதைக் கண்ட பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் இருந்த குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜதுரை தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 3 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்த உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.