கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ரூ.721 வழங்கப்படும் என முன்னாள் மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்தார்.
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்த நிலையில் இன்று காலை இரண்டாவது நாளாக கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீரென ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதே என்பது குறிப்பிடத்தக்கது.