Skip to content

ரூ.250க்கு எலக்ட்ரிக் பைக்… பொள்ளாச்சியில் குவிந்த பொதுமக்கள்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் ரயில் நிலையம் அருகே சரோஜா ஸ்டோர் புதிய கிளைதுவங்கப்பட்டது, 20 வருட பாரம்பரிய மளிகை கடை நடத்தி வரும் செந்தில் மற்றும் பாபு இருவரும் தொழில் செய்து வருகின்றனர். புதிய கிளைகள் பொதுமக்கள் கவரும் விதமாக ரூபாய் 250க்கு பொருட்கள் வாங்கினால் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். முதல் பரிசாக ரூ 80 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பைக் பொது மக்களுக்கு வழங்கியும்,மேலும் 10 பேருக்கு ஆறுதல் பரிசுதரப்பட்டது,வரும் மிலாடி நபி அன்று ரூ 250 மதிப்புள்ள பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு தங்க வளையல் மற்றும் மோதிரம் குலுக்கல் முறையில் தரப்படும்,தீபாவளி மற்றும் பொங்கல் அன்று மிகப்பெரிய பரிசாக ரூபாய் 5 லட்சம் மதிப்பில் கார் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பொதுமக்களுக்கு தரப்படும் எனவும் தக்காளி விலை ஏற்றத்தினால்கடும் பாதிப்பு ஏற்பட்டது, வியாபாரத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இம்மாதிரியானதிட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளது என தெரிவித்தார், இதில் சரோஜா ஸ்டோரில் குழுகள் முறையில் வெற்றி பெற்றவர்களுக்கு எலக்ரிக் பைக் நிறுவனர் பாபு, செந்தில் வழங்கினர், இதில் வியாபாரிகள் சங்க தலைவர் ஹரிகிருஷ்ணன், சிறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் லிங்கபாண்டி, கண்ணன், பர்கத் மன்சூர், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!