கோவையில் கிரடாய் அமைப்பின் சார்பாக பேர்ப்ரோ 2024 எனும் வீடு வாங்கும் திருவிழாவை கோவை கொடிசியா அரங்கில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 02ம்தேதி ,03ம்தேதி மற்றும் 04ம் தேதி என மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இது குறித்த விளப்பர பலகை வெளியீட்டு விழா கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் உணவக அரங்கில் இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேர்ப்ரோ கன்காட்சியின் தலைவர் சுரேந்தர் வெற்றிவேல் கூறும் பொழுது..
கடந்த ஆண்டு கிரடாய் அமைப்பின் சார்பில் மாபேரும் வீட்டு மனை குறித்து கண்காட்சி நடத்த பட்டது இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்த்து இந்த ஆண்டும் இக்கண்காட்சியை நடத்த உள்ளதாகவும், குறிப்பாக நாளுக்கு நாள் கோவை மாநகரில் வீட்டு மனைகளின் விலைவாசி, கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு எளிய தவணை முறையில் வீடுகளை பொதுமக்கள் வாங்கும் வகையில் இக்கண்காட்சி நடைபெற உள்ளது என்றார். மேலும் இங்கு 30க்கும் மேற்பட்ட வீட்டு மனை விற்பனையாளர்கள், 100க்கும் மேற்பட்ட திட்டங்களுடன் மக்களை சந்திக்க உள்ளனர். இந்த திட்டத்தின் எதாவது ஒரு ப்ளான் மூலமாக ஏழை எளிய மக்களும் வீட்டு மனை, மற்றும் வீடுகளை வாங்க முடியும் என்றார். இதற்காக 4 முன்னனி வங்கிகள், ப்ளாட்கள், வில்லாக்கள், கேட்டேட் கம்யூனிட்டிகள், வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை அவரவர் விருப்பத்திற்கேற்ப வாங்க வழி வகை செய்து தருவதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் கன்காட்சியின் தலைவர் குகன் இளங்கோ, பேர்ப்ரோ கண்காட்சியின் செயலர் அரவிந்த் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது