Skip to content

கோவையில் 11 வயது சிறுவன் குக்குட் ஆசனத்தில் நீண்ட நேரம் நின்று கின்னஸ் சாதனை…

  • by Authour

கோவை கணபதியை சேர்ந்த மருத்துவர் மஜீத்,நஜாத் தம்பதியரின் மகன் ரெஹான்.ஆறாம் வகுப்பு படித்து வரும் ரெஹான் தனது நான்கு வயது முதலே அவரது வீட்டின் அருகே உள்ள ஓசோன் யோகா மையத்தி்ல் யோகா கற்று வந்துள்ளார்.மறைந்த யோகா பாட்டி நானம்மாள் மகன் பாலகிருஷ்ணன் நடத்தி வரும் ஓசோன் யோகா மையத்தில் யோகா பயின்று சிறுவன் ரெஹான் யோகாவின் முக்கிய ஆசனங்களான ஏகபாதசிராசனம்,துவிபாத சிரசாசனம்,யோக நித்ரா,பத்மாசனம்,துருவாசன் போன்ற ஆசனங்களை எளிதாக செய்வதோடு,மாவட்ட,மாநில,தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு ஐம்பதிற்கும்

மேற்பட்ட பதக்கம் மற்றும் பரிசுகளை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில், அண்மையில்,ரூஸ்டர் போஸ் எனும் குக்குட் ஆசனத்தை தொடர்ந்து மூன்று நிமிடங்கள் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன் ரெஹான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்..இது குறித்து ரெஹானின் தாயார் நஜாத் கூறுகையில்,சிறு வயதில் சளி,இருமல் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபட யோகா கலையில் ரெகானை ஈடுபடுத்தியதாக கூறிய அவர்,தற்போது வரை பத்துக்கும் மேற்பட்ட உலக சாதனைகளை செய்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.இந்த சிறிய வயதிலேயே யோக சிரோமணி, போன்ற பட்டங்களையும் வென்று உலக சாதனைகளையும் குவித்து வரும் சிறுவன் ரெகானை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!