Skip to content
Home » கோவை….ஆசை வார்த்தை கூறி வியாபாரியிடம் ரூ. 1.02 கோடி மோசடி… தம்பதி கைது…

கோவை….ஆசை வார்த்தை கூறி வியாபாரியிடம் ரூ. 1.02 கோடி மோசடி… தம்பதி கைது…

கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்பாண்டியன்(33). இவர் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வீரகேரளம் அருகேயுள்ள ஆனந்தா நகரை சேர்ந்த அப்பாவு என்கிற விஜயகுமார் (38), அவருடைய மனைவி பிரியதர்ஷினி (37) ஆகியோர் அடிக்கடி வந்து பூஜை பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம். அப்போது, தான் பல்வேறு பகுதிகளில் கடைகள் நடத்தி வருவதாகவும், தான் சாமியார் என்றும், தனக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் தினமும் கடைகளை திறந்ததும் பூஜை செய்வேன் என்பதால் பூஜை பொருட்கள் அதிகம் வாங்கி செல்வதாக விஜயகுமார் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கடைக்கு வந்த தம்பதியினர், தங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதால், அதன் மூலம் தினமும் அதிக வருமானம் கிடைக்கிறது. எனவே நீங்கள் அதில் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் முதலீடு செய்கிறீர்களோ அதற்கு ஏற்ப லாபம் கொடுக்கிறேன் எனக்கூறியுள்ளார். அதன்படி அவர் ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அதன்படி அவர் முதலீடு செய்த பணத்துக்கு லாபமும் கொடுத்துள்ளார். பின்னர், அத்தம்பதியினர் தமிழ்பாண்டியனிடம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாராவது இருந்தால் முதலீடு செய்ய சொல்லுங்கள் எனக்கூறியுள்ளார். தன் பேரில், தமிழ்பாண்டியன் தனது நண்பர்களான ரஞ்சித், சோமசுந்தரம், சுரேஷ், பொன்னழகு, கண்ணன், பாலசுப்பிரமணி, மருதுபாண்டி, சிவா உள்பட 10 பேரிடம் கூறினார். உடனே அவர்களும் அந்த தம்பதியிடம் முதலீடு செய்தனர்.

அவர்களுக்கும் அந்த தம்பதியினர் ஓரிரு மாதம் மட்டும் லாபத்தொகை கொடுத்ததாக தெரிகிறது. மொத்தம் ரூ.1 கோடியே 02 லட்சம் பணம் கொடுத்துள்ளார். லாபத்தையும், அசல் தொகையும் அவர்கள் கூறியபடி தரவில்லை. அதன் பின்னரே தான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தமிழ்பாண்டியன் ஆர்.எஸ்.புரம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் விஜயகுமார் – பிரியதர்ஷினி தம்பதியர் மீது வழக்குப்பதிந்து விசாரித்த போலீஸார், இருவரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!