உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு முதன் முதலாக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொள்கிறார். அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்துகிறார். அதைத்தொடர்ந்து கொடிசியா மைதானத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
