கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கள்ளை ஊராட்சி சுக்காம்பட்டி காலணியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் செல்வம் (40). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் இரவில் சுக்காம்பட்டி காலனியில் உள்ள தனக்கு சொந்தமான மற்றொரு இடத்தில் உள்ள சிறிய கட்டிடத்தில் உறங்குவது வழக்கம்.
வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை வழக்கம் போல் வீட்டிற்கும் வரும் அவர் வெகு நேரமாகியும் காணாததால் அவரது மகன் அவரை தேடிச் சென்றுள்ளார்.
அப்போது அவர் படுத்திருந்த கயிற்று கட்டில் மற்றும் கட்டிடத்தில் ரத்தம் படிந்திருந்தும், அவரது வீட்டில் இருந்து அருகில் 200 மீட்டர் தொலைவில் உள்ள கிணறு வரை அவரது உடலை இழுத்துச் சென்று ரத்தக் கறைகள் படிந்திருந்தும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இதனை தனது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தோகைமலை போலீஸ் இருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து கொலை செய்யப்பட்டு அவரது உடல் கிணற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கு வந்த முசிறி தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் இறந்த செல்வத்தின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.
இதில் செல்வம் கடப்பாறை போன்ற ஆயுதத்தால் தலை, முகத்தில் குத்தியும், பலமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். மேலும் கொலையினை மறைப்பதற்காக அவரது உடல் கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த
கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதம் மற்றும் குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கிணற்றில் இருந்து செல்வத்தின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் தோகைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.