சென்னையில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டதாக அறிவித்திருந்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது வாபஸ் பெறப்பட்டது.
மசோதா திரும்ப பெறப்படுவது குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும். திமுக அரசு கொண்டு வந்த மசோதாவாக இருந்தாலும் திமுக தொழிற்சங்கமே அதை எதிர்த்ததை பாராட்டுகிறேன் எனவும் முதல்வர் தெரிவித்தார். மசோதா தியூர்ப்ப பெறப்பட்டதுக்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்ப பெறப்பட்டது என்றும் தொழிலாளர்களுக்கும் திமுகவிற்குமான உறவை யாராலும் அழித்து விட முடியாது எனவும் என கூறியுள்ளார்.