கடந்த சில நாட்களாகவே தலைப்பு செய்திகளில் இளையராஜா பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். பாடல்களுக்கான உரிமம் பெறுவது தொடர்பான வழக்கில் பேசுபொருளாக இருந்தவர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தையும் காலி செய்துள்ளார். ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசரில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இடம்பெற்ற ‘சம்போ சிவ சம்போ’ பாடலின் வரிகளும், ‘தங்கமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘வா வா பக்கம் வா’ எனும் பாடலின் இசை பின்னணியிலும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதற்காக ‘கூலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸூக்கு, தனது பாடலுக்கு முறையான உரிமம் பெற வேண்டும் அல்லது ’கூலி’ படத்தின் டீசரில் இருந்து அவற்றை நீக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா.