அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ளை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தென்கச்சி பெருமாள்நத்தம், கீழகுடிகாடு,மேலகுடிகாடு ,அடிக்காமலை,
அண்ணங்காரன்பேட்டை,கோடாலி கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு வெள்ளையா
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம், பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, கால்நடைகளை மேய்க்காவோ, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து அதிகப்படியாக தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கல்லணையில் அதிகப்படியான உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி அறிவுறுத்தல் பேரில், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் கண்காணிப்பும் செய்யப்பட்டு வருகிறது