அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரியலூரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளனர். இவர்களில் நான்கு பேர் கரையேறிய நிலையில், அரியலூர் மேலத்தெருவை சேர்ந்த பாபு மகன் கோகுல்(22) என்பவர் மட்டும் கரையேரவில்லை. உடனிருந்த இளைஞர்கள் கோகுலை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து திருமானூர் போலீசாருக்கு கொடுத்த புகாரின் பேரில் போலீசார், மீனவர்கள் உதவியுடன் கோகுலை தேடினர். மீனவர்கள் வலைவீசி
ஒரு மணி நேர தேடலுக்குப் பின், கோகுலின் உடலை சடலமாக மீட்டனர். இதை இடத்தில்
ஏற்கனவே 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவமும் நடந்து ஒரு மாதத்திற்குள் தற்பொழுது ஆற்றில் தண்ணீர் ஓடாமல் குட்டையாக தேங்கி உள்ள நிலையில் இளைஞர் ஒருவர் மீண்டும் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.