திருச்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் ஒரு சில மாதங்களில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதியை சார்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்டித் தர வலியுறுத்தியும் 5ம் தேதி நம்பர் 1 டோல்கேட்டில் அதிமுக சார்பில்நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை சிறப்பான
முறையில் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.பி. ப.குமார் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் S.M.பாலன், C.சின்னசாமி, R.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நகர கழக பேரூர் கழக பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றதுடன் ஆர்ப்பாட்டத்தில் பெரும்திரளாக பங்கேற்பது எனவும் முடிவு செய்தனர்.