திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழன்பில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து லால்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 105 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அன்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அன்பில், கீழன்பில், திண்ணியம்,நடராஜபுரம், மங்கம்மாள்புரம், அரியூர், குறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர்
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
சாலை மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்த லால்குடி ஆர்டிஓ சிவசுப்பிரமணியன், லால்குடி காவல்துறை டிஎஸ்பி அஜய் தங்கம் ஆகிய அதிகாரிகளின் தலைமையில் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் போது
காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்படுத்தியவர்களை போலீசார் கைது செய்து , கைதானவர்களை அழைத்துச் செல்ல வந்த்து.அப்போது அரசு பேருந்து கண்ணாடியை போராட்டக்காரர்கள் அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. இதனைத் தொடர்ந்து அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர்கள் சாலை மறியல் செய்தவர்கள் 40 பெண்கள் உட்பட 200 க்கு ம் மேற்ப்பட்டோரை லால்குடி போலீசார் கைது செய்து லால்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.