தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள அம்மா கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வீட்டிற்கு அவரது இரு மகன்களான சந்தோஷ் (வயது 13) மற்றும் பவித்ரன் (வயது 10) மற்றும்
சென்னையை சேர்ந்த 8 மாணவர்கள் சென்னையில் இருந்து திருவையாறு க்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வந்துள்ளனர். நேற்று மதியம் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கீழ் கொள்ளிடம் ஆற்றில் மாணவர்கள் 10 பேரும் குளித்துள்ளனர்.
அப்போது பச்சையப்பன் என்ற மாணவர் ஆற்றில் உள்ள சூழலில் சிக்கியுள்ளார். அவரை காப்பாற்ற மற்ற மாணவர்கள் முயற்ச்சித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அனைவரும் தடுமாற அங்கு இருந்த பொது மக்கள் அவர்களில் 7 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இதில் சென்னை அம்பத்தூரை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பூமிநாதன் மகன் பச்சையப்பன் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் முனுசாமி மகன் சந்தானகிருஷ்ணன் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த சேர்ந்த மாரிமுத்து மகன் தீபக் ஆகிய
3 பேரும் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளனர். பொதுமக்களால் அவர்களை மீட்க முடியாத நிலையில் உடனடியாக திருமானூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள கிராமங்களில் சுழலில் சிக்கிய வரை மீட்கும் மீனவர்களை கொண்டு மாணவர்களை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டது. மூன்று மணிநேர தேர்தலுக்குப் பின்னர் சென்னை சேர்ந்த பச்சையப்பன் மற்றும் சந்தானகிருஷ்ணன் ஆகியோரின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டது. தஞ்சாவூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த தீபக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் ஆனதால் தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரும், மீனவர் குழுவினரும் மாணவர் தீபக்கை தேடும் பணியை தொடர்ந்தனர். ஒரு மணி நேர தேடலுக்குப் பின்னர் மாணவர் தீபக் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து திருமானூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் குளிக்க வந்த மாணவர்கள் சூழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.