காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து 35,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நாளை 14.ந்தேதி (புதன்கிழமை)காலை 6.மணி முதல் 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தினை பொருத்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதனால் கொள்ளிட கரையோர மக்கள் குளிக்கவோ துணிதுவைக்கவோ கால்நடைகளை கொள்ளிடம் ஆற்றில் ஓட்டிச்செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்