திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பா.ஜ.க. அவதூறு விளம்பரங்கள் வெளியிடுவதாக தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கொல்கத்தா ஐகோர்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பா.ஜ.க. விளம்பரங்கள் வெளியிடக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பா.ஜ.க. விளம்பரங்கள் உள்ளதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க.வுக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. விளம்பரம் என்ற போர்வையில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது அவதூறு புகார்களை கூறுவதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தேர்தல் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை உறுதிசெய்யாமல் பத்திரிகைகள் பிரசுரிக்கக்கூடாது என்றும், இந்திய பத்திரிகை கவுன்சிலின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப பத்திரிகைகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.