Skip to content
Home » கொல்கத்தா சம்பவம்….. டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா..

கொல்கத்தா சம்பவம்….. டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா..

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டு, அவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மருத்துவர் மரணதிற்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. ஜூனியர் மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில் நாட்டு மக்களிடம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி மருத்துவமனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *