தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாளை ஒட்டி திமுக சார்பில் சென்னை மதுரவாயல் தெற்கு தொகுதி 151 வது வார்டில் மாபெரும் கோலப்போட்டி நடந்தது. போட்டியில் முதற்கட்டமாக சுமார் 2000 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதில் தேர்வான 100 போட்டியாளர்களுக்கு மார்ச் 2 அன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற முதல் 10 போட்டியாளர்களுக்கு மார்ச் 5 அன்று பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் பொன்முடி பரிசுகளை வழங்கினர். இதில் முதலிடம் பிடித்த இரண்டு நபர்களுக்கு எல்இடி டிவி பரிசாக வழங்கப்பட்டது.
சென்னை, முதல்வர் பிறந்தநாள் கோலப்போட்டி- வெற்றியாளர்களுக்கு அமைச்சர்கள் பரிசு
- by Authour
