திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , தாயகம் காக்கும் தன்னலமற்ற பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ள படைவீரர்கள்/ முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரையும் கௌரவிக்கும் வகையில் டிசம்பர் 7-ம் தேதியான இன்று படைவீரர் கொடிநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று உண்டியல் வாயிலாக கொடிநாள் வசூலினை துவக்கி வைத்து, சென்ற ஆண்டு சிறப்பாக கொடிநாள் வசூல் செய்த
அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், முன்னாள் படைவீரர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் திரு.கோ.தவச்செல்வம், முன்னாள் படைவீரர் நலத்துறையின் துணை இயக்குநர் லெப்.கமாண்டர் தி.சங்கீதா (ஓய்வு) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.