கன்னியாகுமரியில் மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துவ தாஸ். 61 வயதான முதியவர் ஜவுளிக்கடையில் காவலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார் . இவருக்கு மூன்று மகள். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துதாஸ் மனைவி இறந்து விட்டதால் மூன்றாவது மகள் ஜான்சி வீட்டில் கிறிஸ்துதாஸ் வசித்து வந்திருக்கிறார் .
இந்நிலையில் கிறிஸ்துதாஸ் மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார். அவரை மருத்துவமனை கொண்டு சேர்த்துள்ளார்கள் . ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதன் பின்னர் திருவெட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது கிறிஸ்துதாசுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் . அதனால் தரையில் விழுந்த போது மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என்று அவரது மருமகனும் மகள் ஜான்சியும் தெரிவிக்கிறார்கள் .
ஆனால் பிரேத பரிசோதனையில் கிறிஸ்துதாஸ் தலையில் பலத்த காயங்கள் இருந்தது தெரிய வந்திருக்கிறது . இதனால் பாக்யராஜ் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அவரை அழைத்து விசாரணை நடத்திய போது உண்மை தெரிய வந்திருக்கிறது.
மாமனாரை ஏன் கோடரியால் வெட்டி கொலை செய்தாய் என்று போலீசார் கேட்டதற்கு, கேஸ் சிலிண்டர் வாங்க ஆயிரம் ரூபாய் மாமனார் கேட்டார் . பணமில்லை என்று சொன்னேன். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்து கோடாரியால் அவர் தலையை வெட்டினேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர், மனைவியுடன் சேர்ந்து மாமனார் வலிப்பு வந்து அதில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்துவிட்டார் என்று சொல்லி நாடகமாடி மருத்துவமனைக்கு வந்தோம் என்று கூறி இருக்கிறார். அதை அடுத்து பாக்கியராஜ் போலீசாரை கைது செய்துள்ளனர்,
மாமனாருடன் சேர்ந்து மருமகன் மது அருந்திய போது அப்போதுதான் காஸ் சிலிண்டர் வாங்க ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார். இவர் இல்லை என்று சொல்லவும் அப்போது ஏற்பட்ட தகராறில் கோடறியால் மாமாவை ஆவேசமாக அடித்திருக்கிறார் . பின்னர் கோடரியை கினற்றில் வீசி இருக்கிறார்கள்.