Skip to content

கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

நீலகிரியில்  உள்ள கொடநாட்டில்  ஜெயலலிதாவின்  பங்களாவில் கடந்த   2017ம் ஆண்டு ஏப்ரல் 23,  அன்று  கொலை , கொள்ளை நடந்தது.  இந்த வழக்கின் பின்னணியில் பல விபத்துக்கள், மர்ம சாவுகள் தொடர்கதையாக நடந்தது.

அப்போது  நடந்த எடப்பாடி ஆட்சியில் இந்த வழக்கை  கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாகவும், உண்மை குற்றவாளிகள்  மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்பட்டதை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும்  கொடநாடு வழக்கில் மீண்டும் விசாரணை  துரிதப்படுத்தப்பட்டது.

தற்போது சிபிசிஐடி  போலீசார் இந்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.கொடநாடு வழக்கில் இதுவரை 250 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில்,  இந்த வழக்கு தொடர்பாக, கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தனிப்படை முன் வரும் 27ம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!