கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சேலம் ஆத்தூரை சேர்ந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் இறந்தாா். அவரது அண்ணன் தனபால் நேற்று அளித்த பேட்டியில் தனது சகோதரர் சாவில் மர்மம் உள்ளது. எடப்பாடி சொல்லித்தான் கோடநாடு பங்களாவில் இருந்து ஆவணங்களை எடுத்து வந்ததாக கனகராஜ் தன்னிடம் கூறினார் என்று பேட்டி கொடுத்தார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
கனகராஜ் ஒருபோதும் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டியதில்லை. கோட நாடு கொலை வழக்கை ஆட்சியாளர்கள் அவர்களுக்கு சாதகமாக்க சதி செய்கிறார்கள். இந்த வழக்கில் என்னை தொடர்பு படுத்துவது தவறானது. கனகராஜை ஜெயலலிதாவின் டிரைவர் என்று கூறினால் வழக்கு தொடருவோம்.
அதிமுக என்பது ஒரே கட்சிதான் . அது உடையவில்லை என்பதை மதுரை மாநாடு மூலம் நிரூபித்து விட்டோம். ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் மனம் திருந்து வந்தால் ஏற்போம். அதிமுக கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்தினால் வழக்கு தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.