தமிழகம் முழுவதும் மொத்தம் 159 நீதிபதிகளை இடமாறுதல் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்… அதன்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் (ஆய்வு) ஜோதிராமன், உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த எம்.என்.செந்தில்குமார், கோவை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிபதியாக மாறுதல் செய்யப்பட்டுள்ளார். சென்னை வணிக வழக்குகளுக்கான நீதிமன்ற அமர்வு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலகத்தின் இயக்குநராகவும், அங்கு பணியாற்றிய நீதிபதி டி.லிங்கேஸ்வரன் சென்னை பெருநகர உரிமையியல் தடா நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதி பி.முருகன், சேலம் தொழிலாளர் நீதிமன்றத்துக்கும், நீலகிரி மாவட்ட அமர்வு மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜி.நாராயணன் புதுக்கோட்டை மாவட்ட தலைமை அமர்வு நீதிபதியாகவும், அங்கு பணியாற்றிய தலைமை அமர்வு நீதிபதி ஏ.அப்துல் காதர், நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதியாகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதும் மொத்தம் 159 நீதிபதிகளை இடமாறுதல் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்.