நீலகிரி மாவட்டம் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம் இப்பகுதி வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு பகுதியாக உள்ளது, இங்கு மான்,யானை, சிறுத்தை, காட்டெருமை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றது. அடர் வனப்பகுதிக்கு வனத்துறை என சுற்றுலா பயணிகளை அவர்களது வாகனங்கள் மூலம் வனப் பகுதியில் வனவிலங்குகள் நடமாடும் பகுதிக்கு அழைத்துச் சென்று காண்பிக்கின்றனர். மேலும் கோடை வெயில்
தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் வரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை ஓரம் யானை மற்றும் புள்ளிமான் கூட்டங்கள் அதிக அளவில் தென்படுகின்றது. இதனால் அவ் வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்துகின்றனர். மேலும் வனப்பகுதி காய்ந்து உள்ள நிலையில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வனத்துறை என தடை விதித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.