ஏணியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி..
திருச்சி பொன்மலைப்பட்டி புது தெருவை சேர்ந்தவர் நெல்சன் (40)பெயிண்டர் இவர் நேற்று குமுமணி ரோடு ரெங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வர்ணம் பூசம் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்பொழுது ஏணியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் திடீரென்று ஏணியிலிருந்து சறுக்கி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார் இதையடுத்து ஆபத்தான நிலையில் நெல்சனை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நெல்சன் சிகிச்சை பலனின்றி
பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறையூர்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது
திருச்சி திண்டுக்கல் சாலையில் ஒரு தனியார் கல்லூரி அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதையடுத்து செசன்ஸ் கோர்ட் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்பொழுது ஒரு வாலிபர் திண்டுக்கல் சாலையில் நின்று கொண்டிருந்தார். அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார் மேலும் அவரிடம் போலீசார் சோதனை நடத்திய போது நூற்றுக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை செய்த போது கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தர பாண்டி (வயது 26)என்பது தெரியவந்தது..
இதையடுத்து போலீசார் சண்முக சுந்தர பாண்டியனை கைது இருந்துஅவரிடமிருந்து 100 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கத்தியை காட்டி மிரட்டிய 3 ரவுடிகள் கைது
திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் முத்து கருப்பன் (வயது 41)இவர் தென்னூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை மூன்று வாலிபர்கள் வழிமறித்து முத்து கருப்பனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக
முத்துகிருஷ்ணன் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்த் ( 33) ஸ்டீபன் ( 30)மணிவேலன் (20 ) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.