நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் அவருக்கு இருந்ததால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.