திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐயாக இருப்பவர் மலையாண்டி. இவர் கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வுக்கு சென்றபோது அங்கு ஒருவரிடம் லஞ்சம் கேட்டாராம். இது தொடர்பாக இலங்கை அகதிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் கமிஷனர் காமினி விசாரணை நடத்தி, எஸ்.ஐ. மலையாண்டியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.