புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர்
மு.அருணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை , வேலைவாய்ப்பு , கல்வி உதவித் தொகை , பட்டாமாறுதல்போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 555 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது
விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் மு.அருணா
உத்தரவிட்டார்.
குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் சடையம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் வீரம்மாள் என்பவருக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக செயலிலப்பிற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக
தற்காலிக இயலாமை உதவித் தொகை க்கான
ஆணையினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,
ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( பொது) முருகேசன் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அ. ஷோபா , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க. பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.