கர்நாடக மாநிலம், பெங்களூருவில் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், தனது இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளது என்றும், நில உரிமையாளர்கள் கேட்கும் அட்வான்ஸ் கொடுக்க பணம் தேவை என்றும், விளம்பரதாரரின் சுயவிவரத்தை அணுக நில உரிமையாளர்கள் ஸ்கேன் செய்யக்கூடிய க்யூஆர் (QR) குறியீடு ஆகியவை குறிப்பிட்டு போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரை முழுமையாக, படித்தபோது அது உண்மையாக கிட்னி விற்பனைக்கானது அல்ல.. நகைச்சுவைக்காக.. அதிகளவில் வாடகை, அட்வான்ஸ் வசூல் செய்யும் வீட்டு உரிமையாளர்களை மிரட்ட ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர் என்பது பின்னர் தெரியவந்தது.
நபர் ஒருவர், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திரா நகரில் வாடகைக்கு வீடு தேடி வருவதும், ஆனால் வீட்டின் உரிமையாளர்கள் அதிகளவில் அட்வான்ஸ் தொகை கேட்பதும், அதற்கு ஒரே வழி தனது கிட்னியை விற்பதுதான் என்றும் கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர் மூலம் தெளிவுப்படுத்துகிறார். இந்த போஸ்டரை, ரம்யாக் ஜெயின் என்பவர் சமூக வலைத்தளத்தில் பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு குடியேற உள்ள சிரமங்களைக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இந்த போஸ்டர் தற்போது, லிங்கிடுஇன், டுவிட்டர் என சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த போஸ்டரை கண்டு வியப்புடன் நசைக்சுவையாக கமென்ட் செய்து வருகின்றனர்.