Skip to content

ஆட்டோவில் இளம்பெண் கடத்தல்… கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..

  • by Authour

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 19 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டார். உடனே பல்லாவரம் உதவி ஆணையர் தலைமையில் ஆட்டோவை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். இதனைகண்ட ஆட்டோவில் வந்தவர்கள் கோயம்பேடு மாதா கோவில் தெரு அருகே இளம்பெண்ணை விட்டு விட்டு தப்பி ஓடினர். பின்னர் இளம்பெண்ணை மீட்ட போலீசார் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் கடத்தப்பட்ட பெண் மேற்குவங்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

error: Content is protected !!