கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா காட்டு யானை அட்டகாசத்தால் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடர்ந்த வன பகுதியில் யானைக்கு காலர் ஐடி பொருத்தப்பட்டு விடப்பட்டது.
வனத்தைவிட்டு யானை இரவில் வெளியேறி சரளப்பதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்த வருகிறது. இதையடுத்து வனத்துறை சார்பில் மூன்று கும்கி யானை உதவியுடன் வனத்துக்குள் யானை விரட்டும் முயற்சி நடைபெற்றது. கடந்த சில நாட்களாக கும்கி யானைகளை வனத்துறையினர் மீண்டும் முகாம்களுக்கு திருப்பி அனுப்பினார். இந்நிலையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைந்திருப்பு கூட்டத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் சார் ஆட்சியர் பிரியங்காவிடம் மக்னா பிடிப்பது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர் . இதற்கு பதில் முறையாக வராததால் விவசாயிகள் புறக்கணித்தனர்.
மக்னா உயிருக்கு உத்தரவாதம் இல்லாததால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட கோரி விவசாயிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.