நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்களுக்கான கோ – கோ போட்டி, முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. துவக்க விழா நிகழ்விற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குனர் மற்றும் உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர், எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி விளையாட்டு போட்டியை துவங்கி வைத்தார்.
முன்னாள் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் டிபிஎம் மைதீன்கான் கலந்துகொண்டு வாழ்த்தினார். . Rev.Fr. சகாய ஜான் (தாளாளர் ஜோசப் காலேஜ் வைகால்பட்டி), Rev.Fr. லியோ, முக்கூடல் பேரூராட்சி தலைவர் R.L ராதா லட்சுமணன் மற்றும் துணைத் தலைவர் R. லட்சுமணன் பாலகன் சரஸ்வதி குடும்பத்தார் .பாலகன் கிருஷ்ணன், .கீதா கிருஷ்ணன் , திரு .பொன்னுச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர் .
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 19க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் போட்டிகளில் பங்கு பெற்றனர். முதல் இடத்தை ராணி அண்ணா மகளிர் கல்லூரி (திருநெல்வேலி) அணியும், இரண்டாம் இடத்தை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அன்னை வேளாங்கண்ணி கல்லூரி (தொலையாவட்டம்) அணியும், மூன்றாவது இடத்தை A.P.C. மகாலட்சுமி கல்லூரி (தூத்துக்குடி) அணியும், நான்காவது இடத்தை பராசக்தி மகளிர் கல்லூரி (குற்றாலம்) அணியும் பெற்று கோப்பைகளை தட்டி சென்றனர்.2 நாட்கள் நடந்த போட்டி மற்றும் நிறைவு விழாவும் கோலாகலமாக நடந்தது.
பாலகன் சரஸ்வதி அம்மாள் கல்வி மற்றும் தொண்டு நிறுவன அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் .கமலா சௌந்தர பாண்டியன், சையது குரூப் நிர்வாகத்தின் இயக்குனர் டாக்டர் சையது நவாஸ் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குனர் மற்றும் உடல் கல்வி இயல் மற்றும் விளையாட்டு துறை உதவி பேராசிரியர் முனைவர் திரு. R. ஆறுமுகம் , பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாரி வண்ண முத்து, பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் R. கிருஷ்ணவேணி ஆகியோர் விழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
போட்டிகளில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகளையும், வெற்றி பெற்ற மாணவிகளையும் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் செயலர் பாலகன் ஆறுமுகசாமி பாராட்டினார்.