தமிழ்நாடு அரசின் சார்பாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் (Khelo India Youth Games) 2023 ஜனவரி மாதம் 19.1.2024 முதல் 31.1.2024 வரை நடைபெறுகிறது. இதற்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டிகள் சென்னையில் 30.11.2023 முதல் துவங்கி நடைபெற இருந்தது. சென்னையில் பெய்த தொடர் மழையின் காரணமாக தேர்வு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 12.12.2023 முதல் நடைபெற உள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்-2023 , கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் 19.1.2024 முதல் 31.01.2024 வரை நடைபெற உள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்-2023-ல் கூடைப்பந்து, கபடி, கோ-கோ, வாலிபால், ஹாக்கி மற்றும் கால்பந்து ஆகியவற்றிற்கான குழு விளையாட்டுகளில் தமிழ்நாட்டு அணியும் இடம் பெற உள்ளது.
தமிழ்நாடு அணியில் இடம் பெறுவதற்கான தேர்வுப் போட்டிகள்- கூடைப்பந்து விளையாட்டில் பெண்களுக்கு 12.12.2023 அன்று காலை 7மணிக்கும், ஆண்களுக்கு 13.12.2023 அன்று காலை 7.மணிக்கும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கத்திலும், கால்பந்து விளையாட்டில் பெண்களுக்கு 12.12.2023 அன்று காலை 7. மணிக்கும், ஆண்களுக்கு 12.12.2023 மற்றும் 13.12.2023 ஆகிய நாட்களில் காலை 7 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும். கபடி விளையாட்டில் பெண்களுக்கு 12.12.2023 அன்று காலை 7. மணிக்கும், ஆண்களுக்கு 13.12.2023 அன்று காலை 7 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திலும், கோ- கோ விளையாட்டில் பெண்களுக்கு 12.12.2023 அன்று காலை 7 மணிக்கும், ஆண்களுக்கு 13.12.2023 அன்று காலை 7 மணிக்கு அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளியிலும்,
வாலிபால் விளையாட்டில் பெண்களுக்கு 12.12.2023 அன்று காலை 7மணிக்கும், ஆண்களுக்கு 13.12.2023 அன்று காலை 7மணிக்கும் அண்ணா விளையாட்டு அரங்கம் திருச்சிராப்பள்ளியிலும், ஹாக்கி விளையாட்டில் பெண்களுக்கு 12.12.2023 அன்று காலை 7மணிக்கும், ஆண்களுக்கு 13.12.2023 அன்று காலை 7 மணிக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கம் மதுரையிலும் தேர்வுப்போட்டிகள் நடைபெற உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர் – வீராங்கனைகளுக்கு திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டுப் பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.
பங்கேற்பதற்குத் தகுதி பெற விளையாட்டு வீரர்கள் வயது வரம்பு (01.01.2005 ஜனவரி 1ம் தேதி 2005 அன்றோ (அல்லது) அதற்குப் பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். வயதுச்சரிபார்ப்பு செயல்முறைக்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் இரண்டினைச் சமர்ப்பிக்கவேண்டும்.
– ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட்
– பள்ளிக் கல்விச்சான்றிதழ் (SSLC/ 10 ஆம் வகுப்பு)
– பிறப்புச் சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் ஜனவரி 1, 2013 அன்று அல்லது அதற்கு முன் வழங்கப்பட்டது)
தகுதியுள்ள அனைத்து விளையாட்டு வீரர் – வீராங்கனைகளும் தேர்வுப்போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.
எனவே அரியலூர் மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் இத்திட்டத்தின் கீழ் பங்கேற்று பயனடைய செய்யுமாறும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின் அவர்களை 7401703499 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.