தஞ்சை வல்லம் ஏகெளரி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தேர்தல் இந்து சமயஅறநிலைத்துறை சார்பில் நடத்தப்பட்டது.
அறநிலைத்துறை உதவி ஆணையர் கோ.கவிதா தலைமை வகித்து தேர்தலை நடத்தினார்.
அறநிலையத்துறை ஆய்வாளர் ம.பாபு, செயல் அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தஞ்சை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கோ. அருளானந்தசாமி கலந்து கொண்டார்.
இதில் குழு உறுப்பினர்கள் வாக்கு பெட்டியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வல்லத்தை சேர்ந்த தொழிலதிபரும் , ஜி.என்.டி குழும உரிமையாளருமான அ.பாஸ்கர் அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட அ.பாஸ்கருக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.
இதில் வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், வல்லம் நகர திமுக செயலாளர் டி.கே.எஸ்.ஜி கல்யாணசுந்தரம்,
துணை செயலாளர் ஆர்.கோவிந்தராஜ், பேரூராட்சி 12 வதுவார்டு கவுன்சிலர் சிங்.இரா.அன்பழகன், அறநிலையத்துறை கணக்கர் இரா.பாபு மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வல்லம் ஏகெளரிஅம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள அ.பாஸ்கருக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அனைவரின் ஒத்துழைப்போடு அறங்காவலர் குழு தலைவராக சிறப்பாக செயல்படுவேன் என அ.பாஸ்கர் தெரிவித்தார்.