கரூரில் அண்ணல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை கலெக்டர் தங்கவேல் துவக்கி வைத்தார்.
நெசவாளர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு கதர் மற்றும் கிராமப் பொருட்கள் ரூபாய் 92 லட்சம் மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டது நடப்பாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கரூர் மாவட்டத்திற்கு 1 கோடியே 76 லட்சம் மதிப்பிலான கதர் பாலியஸ்டர் பட்டு மற்றும் உல்லன் ரகங்களை விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மலர் மாவை தூவி மரியாதை செலுத்திய பிறகு 1,500 ரூபாய் மதிப்புள்ள தலா 2 சேலைகள் மற்றும் வேட்டிகள் வாங்கி விற்பனையை துவக்கி வைத்தார்.
கதர் பாலிஸ்டர்மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும் குறிப்பிட்ட ரகங்களுக்கு 50% தள்ளுபடி விற்பனையாக வைக்கப்பட்டுள்ளது.