Skip to content
Home » திருச்சியில் புகையிலை விற்ற கேரள வாலிபர் கைது…

திருச்சியில் புகையிலை விற்ற கேரள வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி ரயில்வே ஜங்சன், ராக்கின்ஸ் சாலை அருகே அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கன்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு கடையில் தடையை மீறி புகையிலை விற்ற அக்கடையின் உரிமையாளரான கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த முகமது சின்னன் (21) என்பவரை கன்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் ரூ.2 ஆயிரத்து 90 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.