‘தி கேரளா ஸ்டோரி’ பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. கேரளத்தில் உள்ள இந்து, கிறிஸ்தவ இளம் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி, அங்கிருந்து ஈராக், சிரியா போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்த்து விடுகிறார்கள் என்பது தான் தி கேரளா ஸ்டோரியின் மையக்கருத்து. இது உண்மை சம்பவம் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது.
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இந்த படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அதா ஷர்மா , யோகிதா பிஹானி , சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. பல மாநிலங்களில் இப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கு தடை விதித்து மேற்கு வங்காள அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் அமைதியாக திகழவும், சட்டம், ஒழுங்கை நிலை நாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.