பிரதமர் மோடி கொச்சியில் நேற்று 3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களில் 94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மட்டுமே மத்திய அரசுடையது என கேரள நிதியமைச்சர் கூறியுள்ளார்.
கேரள நிதியமைச்சர் பாலகோபால் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்களில், வாட்டர் மெட்ரோ, டிஜிட்டல் அறிவியல் பூங்கா உள்ளிட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், மாநில அரசின் திட்டங்கள் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி துவக்கி வைத்த மத்திய அரசின் திட்டமான வந்தே பாரத் ரயிலுக்கு, 94 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உரிய நிதி ஒதுக்காமல் கேரள அரசை மத்திய அரசு மூச்சு திணற வைப்பதாகவும், பாலகோபால் அந்த வீடியோவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.