கிரிப்டோ கரன்சி மோசடி குற்றவாளிகளான அகில் மற்றும் நிகில் ஆகிய இருவரை பிடிக்க கொச்சிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் சென்றிருந்தனர். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த அவர்கள் இருவரையும் விடுவிக்க ரூ. 25 தருமாறு பேரம் பேசியுள்ளனர். இதில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ரூ. 1 லட்சமும் மற்றொரு நபர் 2.95 லட்சமும் கொடுத்துள்ளனர். ஆனால் குறைந்தது 15 லட்சமாவது வேண்டும் என கர்நாடக போலீசார் அடம் பிடித்து பிரச்சனை செய்துள்ளனர். இது தொடர்பாக குற்றவாளிகள் அகில் மற்றும் நிகில் இருவரும் ரகசியமாக கேரள மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கேரள போலீசார் மப்டியில் இருந்த கர்நாடக இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசாரிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் பேரம் பேசி வாங்கிய ரூ. 3.95 லட்ச ரூபாயை கைப்பற்றினர். லஞ்சம் வாங்குவதற்காக கொச்சிக்கு வந்த கர்நாடக போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்தத்தும் கர்நாடக போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.