கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா காஞ்சிரோடு பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (31). கடந்த வருடம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் விஷ்ணுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே கோட்டயம் அருகே உள்ள செங்கணூரை சேர்ந்த ஸ்வீட்டி என்ற இளம்பெண்ணுடன் விஷ்ணுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பெற்றோரின் கடும் எதிர்ப்பை மீறி விஷ்ணுவை ஸ்வீட்டி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் பத்தாம் வகுப்பு மாணவியுடன் இருந்த நெருக்கத்தை விஷ்ணு குறைக்க வில்லை. இந்நிலையில் அந்த மாணவியை வைத்து ஆபாச வீடியோ எடுத்து பணம் சம்பாதிக்க விஷ்ணு திட்டமிட்டார். இதற்கு மனைவியின் சம்மதம் பெற்ற பிறகு கடந்த சில தினங்களுக்கு முன் அந்த மாணவியை விஷ்ணு தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளார். அதை ஸ்வீட்டி செல்போனில் வீடியோ எடுத்தார்.
இதன்பின் விஷ்ணு இன்ஸ்டாகிராமில் தனி கணக்கு தொடங்கி போட்டோவை 50 முதல் 500 ரூபாய்க்கும், வீடியோவை 1500 ரூபாய்க்கும் அவர் விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் ஆபாச இணையதளங்களிலும் ஆபாச போட்டோ மற்றும் வீடியோவை இவர் பதிவேற்றம் செய்துள்ளார். இதன் மூலமும் இவருக்கு நிறைய பணம் கிடைத்துள்ளது. தனது ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி விஷ்ணு, அவரது மனைவி ஸ்வீட்டியை கைது செய்தனர்.