Skip to content
Home » திருச்சி அதிகாரி வீட்டில் நகை கொள்ளை….. கேரள கொள்ளை கும்பல் கைது..

திருச்சி அதிகாரி வீட்டில் நகை கொள்ளை….. கேரள கொள்ளை கும்பல் கைது..

  • by Authour

திருச்சிதிருவெறும்பூர்  அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (45). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (40) இவர்அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள்  நாமக்கல்லில் தங்கி படித்து வருகிறார்.

கடந்த மாதம் 23ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 52 பவுன் நகை மற்றும் வெள்ளி  பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இன்நிலையில்  துவாக்குடிமலை  பாரதியார் தெருவை சேர்ந்த கெளதம் என்கிற தேஜா (24) என்பவரைபிடித்து விசாரணை செய்த பொழுது அவருடைய மனைவி அபிநயா (22) மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு சந்திராபுரம்  வாளையார் பாறையைச் சேர்ந்த பாபு என்கின்ற ஏசுதாஸ் (39) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் அவர்கள் மூன்று பேரையும் நவல்பட்டு போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து திருட்டு போன 52 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கேரளவை சேர்ந்த ஏசுதாஸ் என்பவன் பல இடங்களில் தனியாகவும் நண்பர்களுடன்  சேர்ந்தும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான் .இவன் மீது சுமார் 30 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது என போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *