கேரள மாநிலம் வயநாட்டில் பலத்த மழை கொட்டி வருவதுடன் இன்று அதிகாலை 3 இடத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 50 பேர் பலியானார்கள். மேலும்1 00 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. நிலச்சரிவு பகுதிகளில் சுமார் 1000 பேர் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும்பணி ஹெலிகாப்டர் மூலம் நடக்கிறது. இந்த நிலையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் ராஜ்யசபாவில் கேரள மாநில எம்.பிக்கள், நிலச்சாிவு பிரச்னையை கிளப்பினர்.
நிலச்சரி்வை தேசிய பேரிடராக அறிவித்து கேரளாவுக்கு உதவ வேண்டும். சபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என போர்க்குரல் எழுப்பினர். அப்போது சபையை நடத்திய தலைவர் ஜெகதீப் தன்கர், பி்ரதமர் மோடி கேரள முதல்வருடன் பேசி தேவையான நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரிவித்து விவாதிக்க அனுமதி மறுத்தார். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதுபோல மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் கேரளா பிரச்னையை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.