கேரள மாநிலம் வயநாடு சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 31 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அனைவரும் கூலித்தொழிலாளிர்கள் என்றும் அவர்களை பற்றிய எந்த தகவலும் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். காணாமல் போனவர்கள் பற்றி தமிழக அரசு அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர் தகவல் சேகரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து 45 நிவாரண முகாம்களில் பதிவான விவரங்களை வைத்து தகவல் சேகரிக்கப்படுகிறது. ஏற்கனவே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.
