கேரளாவில் வயநாடு பகுதியில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்க ராணுவம் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மீட்புப் பணிகளுக்கு உதவ 2 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.