கோவை மாவட்டம் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் பொள்ளாச்சி நகர்ப்புறம் மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் தமிழக போலீசார் குட்கா ,பான் மசாலா, கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் கடத்துவதை தடுக்கும் விதமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அடுத்து பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி சிருஷ்டி சிங் தலைமையில் தனிப்படையினர் உதவி ஆய்வாளர் கௌதம் மற்றும் காவலர்கள் கோபாலபுரம் சோதனை சாவடியில் சோதனை செய்தபோது பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வந்த கேரள அரசு பேருந்து கஞ்சா கடத்தி வந்த மலப்புரத்தைச் சேர்ந்த முகமது சபீர் என்பவரை கைது செய்தும் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து தாலுக்கா காவல் நிலையம் ஆய்வாளர் சந்திரலேகாவுடன் ஒப்படைத்தனர். பின் முகமது சபீரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்,அரசு பஸ்ஸில் கஞ்சா கடத்திய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.