கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் சோஜன். அவருடைய மனைவி ஜினா. இவர்களது மகள் ஜோவானா ( 8). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு ஜோவானா, தனது வீட்டில் ‘நூடுல்ஸ்’ உணவு சாப்பிட்டு கொண்டிருந்தாள். அப்போது தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவளை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக அடிமாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோவானா பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து அடிமாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.