கேரள மாநிலம், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் போதைக்கு அடிமையான சந்தீப் என்பவரால், மருத்துவர் வந்தனா தாஸ் (24)கொடூரமாக கத்திரிக்கோலால் குத்தி கொல்லப்பட்டார். அவருடைய உடலில் 11 காயங்கள் இருந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, தலையில் மூன்று முறையும், முதுகில் 6 முறையும் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் வந்தனா தாஸின் படுகொலையைக் கண்டித்து, கேரளா முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவசர சட்டம் நிறைவேற்றுமாறு முதல்வர் பினரயி விஜயனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்லப்பட்ட வந்தனா தாசின் தந்தை தொழில் அதிபர் மோகன் தாஸ். அவருக்கு வந்தனா ஒரே மகள். அந்த ஒரே மகளை இழந்ததால் மோகன்தாஸ் குடும்பம் மீளாத்துயரில் மூழ்கி உள்ளது. வந்தனா ஏழைகள் மீது மிகவும் பரிவு காட்டும் குணம் படைத்தவர். எனவே அவர் வசித்து வந்த பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.