கேரள திரையுலகத்தையே கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டி அறிக்கை உலுக்கி எடுத்து வருகிறது. திரையுலகில் காலம், காலமாக பாலியல் கொடுமை நடந்து வருவதாக, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருப்பதே ஒட்டுமொத்த அதிர்ச்சிக்கு காரணம். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து, கேரளா நடிகைகள் தங்களது வாழ்க்கையில் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் சம்பவத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கி வருகின்றனர். அந்தவகையில், கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சிமி ரோஸ்பெல் ஜான், ‘திரையுலகில் உள்ள ‘காஸ்டிங் கவுச்’ முறையைப் போன்று காங்கிரஸ் கட்சியிலும் இருக்கிறது. கட்சிக்குள் வாய்ப்புகளை பெறுவதற்காக பெண் உறுப்பினர்கள் பாலியல் சுரண்டலை சகித்து கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆண் தலைவர்களை கவர்வதன் மூலம் மட்டுமே குறிப்பிடத்தக்க பதவியை பெற முடியும். திறமைக்கும், அனுபவத்துக்கும் மரியாதையே கிடையாது. இவ்வாறு அவர் குற்றச்சாட்டினார். அவர் புகார் எழுப்பிய சில மணி நேரத்திலேயே அவரை கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி நீக்கியது.